Awards

மாற்றுத் திறனாளிக்கான தமிழக அரசு விருதுகள் 2019

by
மாற்றுத் திறனாளிக்கான தமிழக அரசு விருதுகள் 2019 மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரியதவர்கள் / நிறுவனங்களுக்கு கீழ்க்காணும் தமிழக அரசு விருதுகள்

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரியதவர்கள் / நிறுவனங்களுக்கு கீழ்க்காணும் தமிழக அரசு விருதுகள், 3.12.2019 அனைத்து நாடுகள் மாற்றுத் திறனாளிகள் தினத்தன்று வழங்கப்படவுள்ளது.

கீழ்காணும் விருதுகள் பெற,
மாற்றுத் திறனாளிகளுக்கான நல ஆணையர்,
மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம், எண்.5,
காமராஜர் சாலை,லேடி வெலிங்டன் கல்லூரி வளாகம், சென்னை – 600 005.

அல்லது

www.scd.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து அல்லது அந்தந்த மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் அவர்களிடம் விண்ணப்பம் பெற்றுக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் பரிந்துரை பெற்று மாற்றுத் திறனாளிகளுக்கான நல ஆணையர் அவர்களுக்கு 21.10.2019 க்குள் அனுப்ப வேண்டும்.

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரின் பரிந்துரை இல்லாத விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது.

சிறந்த பணியாளர் / சுயதொழில் புரிபவர்

விருதுகள் விவரம்சிறந்த பணியாளர் / சுயதொழில் புரிபவர்

(கை, கால் பாதிக்கப்பட்டோர், பார்வை திறன் பாதிக்கப்பட்டோர், செவித் திறன் பாதிக்கப்பட்டோர், மனவளர்ச்சி குன்றியோர் மற்றும் தொழுநோயால் குணமடையதோர்)
விருதுகள் எண்ணிக்கை5 விருதுகள்
விருது விவரம்10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ்

சிறந்த ஆசிரியர்

விருதுகள் விவரம்சிறந்த ஆசிரியர்

(பார்வைத் திறன் பாதிக்கப்பட்டோருக்கு கற்பித்தல், செவித் திறன் பாதிக்கப்பட்டோருக்கு கற்பித்தல், மற்றும் மன வளர்ச்சி குன்றியோருக்கு கற்பித்தல்)
விருதுகள் எண்ணிக்கை3 விருதுகள்
விருது விவரம்10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ்

சிறந்த சமூகப் பணியாளர்

விருதுகள் விவரம்சிறந்த சமூகப் பணியாளர்
விருதுகள் எண்ணிக்கை1 விருது
விருது விவரம்10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ்

மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனம்

விருதுகள் விவரம்மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனம்
விருதுகள் எண்ணிக்கை1 விருது
விருது விவரம்10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ்

மாற்றுத்திறனாளிகளை அதிக அளவில் பணியமர்த்திய சிறந்த நிறுவனம்

விருதுகள் விவரம்மாற்றுத்திறனாளிகளை அதிக அளவில் பணியமர்த்திய சிறந்த நிறுவனம்
விருதுகள் எண்ணிக்கை1 விருது
விருது விவரம்10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ்

ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பணியாற்றும் சிறந்த ஆசிரியர்

விருதுகள் விவரம்ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பணியாற்றும் சிறந்த ஆசிரியர்
(செவித் திறன் குறையதோருக்கு கற்பிக்கும் சிறந்தஆசிரியர் மற்றும் மன வளர்ச்சி குன்றியோருக்கு கற்பிக்கும் சிறந்த ஆசிரியர்)
விருதுகள் எண்ணிக்கை2 விருதுகள்
விருது விவரம்10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ்

மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பாக பணியாற்றிய ஓட்டுநர் மற்றும் நடத்துனர்

விருதுகள் விவரம்மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பாக பணியாற்றிய ஓட்டுநர் மற்றும் நடத்துனர்
விருதுகள் எண்ணிக்கை2 விருதுகள்
விருது விவரம்10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ்

பதிவிறக்கம்

விண்ணப்பங்கள் மற்றும் விருக்கான விவரங்கள்

Share your accessibility story

Tell us about a story, event, or person connected to disability inclusion and accessibility.

Contact Us

Share Your Thoughts...