மாற்றுத்திறனாளிகள் ஆன்லைன் மூலம் இராயில் முன்பதிவிகளை (e-tickets for persons with disabilities ) பெற இராயில்வே துறை வழிவகை செய்துள்ளது.
பல வருடங்களாக மாற்றுத்திறனாளிகளும் ஆன்லைனின் முன்பதிவு செய்யும் வசதி வேண்டி கோரிக்கை வைத்தவண்ணம் இருந்தனர். கடைசியாக வடஇந்தியா இராயில்வே மாற்றுத்திறனாளிகளும் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியது. தற்போது இந்தியா முழுவதும் இச்சேவை விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் இராயில்வே இ–கார்டு பதிவு செய்ய வேண்டிய ஆவணங்கள்
- ஜ–கார்டு படிவம் – Application form( படிவம் இராயில்வே அலுவலகத்தில் தரப்படும் )
- இரண்டு புகைப்படங்கள் (Recent passport size photo)
- சலுகை படிவம் மற்றும் நகலுடன் ( Railway concession form with 2 xerox )
- முகவரி சான்றிதழ் ( Address proof)
- அடையாள அட்டை ( Identicard )
- வயது சான்றிதழ் ( Age Certificate )
மேற்கண்ட ஆவணங்களுடன் அருகிலுள்ள Divisional Railway Manager அனுகவும்.
Download : E-Ticketing Application form(PDF, 26KB)
சென்னை வாசிகளுக்கு
சென்னை சென்ட்ரல் முதன்மை கட்டிட அருகில் உள்ள முன்பதிவு கட்டிடத்தில் 2வது தளத்தில் உள்ள அலுவகத்தை அணுகவும். சாயுவு தளம் (Ramp) மற்றும் மின்தூக்கி (Lift) வசதி உள்ளது.
Discover more from enabled.in
Subscribe to get the latest posts sent to your email.