
இந்தியாவிலுள்ள பொதுத் துறை வங்கிகளில், கிளர்க்ஸ் (Clerks) என்ற பணிகளுக்கான ஐபிபிஎஸ் (IBPS) நடத்தும் பொது தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும்,விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணிகள்:
கிளர்க்ஸ் (Clerks)
மொத்த காலியிடங்கள் : 12,075
மாற்றுத் திறனாளிக்கான மொத்த காலியிடங்கள் : 624
முக்கிய தேதிகள் :
| ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள் | 17.09.2019 |
| ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் | 09.10.2019 |
| ஆன்லைனில் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாள் | 09.10.2019 |
தேர்வு நடைபெறும் தேதிகள்:
முதல் நிலைத்தேர்வு நடைபெறும் தேதிகள்: 07.12.2019, 08.12.2019, 14.12.2019 & 21.12.2019
முதன்மைத்தேர்வு நடைபெறும் தேதி: 19.01.2020
தேர்வுக்கட்டணம்:
- எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் / முன்னாள் ராணுவத்தினர் – ரூ.100
- எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் / முன்னாள் ராணுவத்தினர் தவிர மற்ற பிரிவினர் – ரூ.600
வயது வரம்பு: (01.09.2019 அன்றுக்குள்) குறைந்தபட்சமாக 20 வயது முதல் அதிகபட்சமாக 28 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில், குறைந்தபட்ச கல்வித்தகுதி, ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். அதுமட்டுமல்லாது கணினி சார்ந்த அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும். கூடுதலாக பகுதி சார்ந்த மொழித்திறன் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில், https://www.ibps.in/- என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.
மேலும், இது குறித்த முழுத் தகவல்களை பெற, விளம்பர தகவல்களை பார்க்கவும்
Discover more from enabled.in
Subscribe to get the latest posts sent to your email.
Nhdfc loan through PNB Trichy Tamilnadu for Rs.50000/-for 58 year old self employed low vision 75%disablity person.self employed for the past 32 years