தமிழக அரசின் திட்டம் – மாற்றுத் திறனாளிகளுக்கான கருப்புக் கண்ணாடிகள் மற்றும் மடக்கு ஊன்றுகோல்கள்
திட்டத்தின் சுருக்கம்
பார்வையற்றோர் சுலபமாகவும், சுதந்திரமாகவும் தனியாக சென்று வரவும், அவர்கள் சூரிய ஒளி மற்றும் ஈரப்பதத்தினால் பாதிக்கப்படுவதைத் தடுக்கவும் இத்துறையின் மூலம் இலவசமாக கருப்புக் கண்ணாடி மற்றும் மடக்கு ஊன்றுகோல் வழங்கப்பட்டு வருகிறது.
திட்டத்தில் பயனடைய தகுதிகள்/நிபந்தனைகள்
முழுவதுமாக பார்வையற்ற நபராக இருத்தல் வேண்டும்.
தனிப்பட்ட விண்ணப்பப் படிவம் உள்ளதா? ஆம் எனில் குறிப்பிடப்பட வேண்டிய விவரங்கள்
ஆம். சம்பந்தப்பட்ட மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலர்களிடம் உள்ளது.
இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள்
தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை
விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளும் அலுவலர்
மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலர்
உதவிகள் வழங்கப்படும்போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர்
Principal Secretary / State Commissioner for the Differently Abled,
State Resource cum Training Centre Campus, Jawaharlal Nehru Inner Ring Road,
K.K. Nagar, Chennai – 600 078. Ph: 044-24719947 / 48 / 49
Goggles and Folding Sticks
Discover more from enabled.in
Subscribe to get the latest posts sent to your email.